உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும்.
உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக
விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை.
விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது.
இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நீங்கள் பயன்படுத்தமுடியும்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது…
Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின், நீங்கள் செல்லவேண்டியது Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidthஎன்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.
மாற்றங்களை செய்த பின் OK பொத்தானை அழுத்தி மாற்றங்களைச் சேமியுங்கள். இனி உங்கள் இணைய பட்டை அகலத்தை 100% முழுமையாக நீங்கள் பயன்படுத்தலாம்.