அகச்சிவப்புக் கதிர்களில் இருந்து மின்சாரம்!


சூரியனில் இருந்து வெளிப்படும் அகச்சிவப்புக் கதிர்களில் இருந்தும் மின்சாரம் தயாரிப்பதற்கான புதுவழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கா ரைஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.
ஆய்வாளர்களில் ஒருவரான, மின்னியல் மற்றும் கணினிப் பொறியியல் பேராசிரியர் நவோமி ஹாலாஸ் கூறுகையில், “தற்போது சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான சிலிக்கான் பேனல்களில் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டுபிடித்து ஈர்ப்பதற்கான வழி இல்லை. எனவே, நாங்கள் அதில் நானோ ஆன்டெனாக்களை செமி கண்டக்டருடன் இணைத்து அகச்சிவப்புக் கதிர்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க வகை செய்திருக்கிறோம். இதன்மூலம், அதிகத் திறன் வாய்ந்த சூரியசக்தித் தகடுகளை உருவாக்கலாம்” என்கிறார்.

பூமிக்கு வரும் சூரிய சக்தியில் மூன்றில் ஒரு பங்கு, அகச்சிவப்புக் கதிர்களாகும். ஆனால், இன்று பெரும்பாலான சூரியசக்தித் தகடுகளில் பயன்படுத்தப்படும் பொருளான சிலிக்கானால் அகச்சிவப்புக் கதிர்
களின் சக்தியை ஈர்க்க முடிவதில்லை.
அகச்சிவப்புக் கதிர்கள் போன்ற குறிப்பிட்ட அலைநீளத்துக்குக் குறைவாக உள்ள வெளிச்சக் கதிர்கள், மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படாமல் சாதாரண சூரியசக்தித் தகடுகளைக் கடந்து சென்றுவிடுகின்றன. அந்த நிலையைத் தங்கள் கண்டுபிடிப்பு மாற்றுகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
தங்களின் கண்டுபிடிப்பைக் கொண்டு, அதிதிறன் வாய்ந்த சூரியசக்தித் தகடுகளை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும், அவற்றின் மூலமாக அதிக அளவில் சூரியசக்தி மின்சாரத்தைத் தயாரிக்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து முனைப்பாக நடைபெற்று வருகின்றன.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget