பழைய பிரவுசர்களைக் கைவிடும் கூகுள்

கூகுள் தன் அப்ளிகேஷன் சாப்ட்வேர்களில், பழைய பிரவுசர்களுக்கான தொழில் நுட்ப உதவியை நிறுத்திவிடப் போவதாக அறிவிப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, மொஸில்லா பிரவுசர் 3.5. ஆப்பிள் சபாரி 3 மற்றும் கூகுள் பிரவுசர் 9 ஆகியவற்றை கூகுள் சுட்டிக் காட்டியுள்ளது.
இவை அனைத்துமே, இவற்றிற்குப் பின்னர் இரண்டு புதிய பதிப்புகளை வெளியிட் டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் புதிய பதிப்பிற்கு மாற வேண்டும் என கூகுள் எதிர்பார்க்கிறது. கூகுள் மெயில் மற்றும் டாக்ஸ் புரோகிராம்களும், இவற்றிற்கான சப்போர்ட் தந்திடும் பணியை நிறுத்துவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 
எந்த ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பிற்கும், புதிய பதிப்பு ஒன்று வெளியாகும்போது, அதற்கு முந்தைய பதிப்பிற்கு முந்தைய பதிப்பிற்கான உதவியை நிறுத்துவதனை கூகுள் இனி வாடிக்கையாகக் கொள்ளும் என இந்நிறுவன பொறியியல் குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். 
இவ்வாறு அறிவிப்பது, கூகுள் நிறுவனத் திற்கு முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2010 ஆம் ஆண்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6க்கு தன் சப்போர்ட்டை நிறுத்தியது. கூகுள் டாக்ஸ் இனிமேல் அதனுடன் இயங்காது என அறிவித்தது. அப்போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 னை, 10.4% மக்கள் பயன்படுத்தி வந்தனர். இருந்த போதும் தன் கொள்கையை குகூள் அமல்படுத்தியது. 
இப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சப்போர்ட்டை நிறுத்துவதாக, கூகுள் தான் முதன்முதலாக அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் இதற்கான சப்போர்ட்டை ஏப்ரல் 2014 வரை தரப்போவதாக அறிவித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால், பழைய பிரவுசர்கள் மூலம் கூகுள் சர்ச் இஞ்சினில் நாம் இன்னும் தேடுதல் வேலையை மேற்கொள்ள முடியும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget