விண்டோஸ் பதிவகத்தை சமநிலைக்கு கொண்டுவர.


விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் முதுகெலும்பு விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி ஆகும். இந்த விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில்
ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனால் நம்முடைய இயங்குதளத்தில் பல்வேறு குறைபாடுகள் எழ வாய்ப்புண்டு. விண்டோஸ் தொடங்குவதில் இருந்து மற்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது வரை அனைத்தும் தாமதமாகவே இருக்கும்.
இதுபோன்ற குறைபாடுகளை களைய வேண்டுமெனில் நம்முடைய விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரிசெய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏதேனும் மதிப்புகள் (Value) மாறியிருப்பினும் விண்டோஸ் இயங்குதளத்தில் பிரச்சினை எழ வாய்ப்புண்டு. மேலும் இருப்பியல்பு கோப்பறைகளையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை மேம்படுத்தவும், விண்டோஸ் ரிஸிட்டரியை பழைய நிலைக்கு கொண்டுவருவதன் மூலமாகவே சரிசெய்ய முடியும்.
கணினியில் பல்வேறு மென்பொருளை நிறுவி பயன்படுத்துவோம் பிடிக்கவில்லையெனில் அதனை நம்முடைய கணினியில் இருந்து அகற்றிவிடுவோம். இவ்வாறு அகற்றும் மென்பொருள்களால் விண்டோஸ் ரிஸிட்டரியில் ஏற்படும் பாதிப்புகளால் கணினியானது மந்த நிலைக்கு செல்லும், மேலும் கணினி தொடக்கத்திலும் பல குறைபாடுகள் எழ வாய்ப்புண்டு. இதனை சரிசெய்ய வேண்டுமெனில் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்பியல்பாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்துகொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Refresh my Windows settings என்னும் பொத்தானை அழுத்தவும். பின் சிலமணி நேரங்களில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்று முடிவுகள் தெரியவரும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி இருப்புநிலைக்கு கொண்டுவரப்பட்டது, இருப்பியல்பு கோப்பறைகள் மாற்றப்பட்டு, அனைத்தும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டிருக்கும். இப்போது கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள் முன்பு இருந்த கணிப்பொறி தொடக்கத்திற்கும், தற்போது இருக்கும் தொடக்கத்திற்கும் மாற்றம் தெரியும். கணினியில் இயக்கமும் வேகமடையும். பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget