
உலகில் எந்த சாலையின் நெரிசலான தெருக்களில் ஒரு காரை ஓட்டும் அனுபவம் வேண்டுமா!! அதற்கு கூகிள் வரைபடம் உதவி செய்கின்றது.
கூகிள் வரைபடத்தின் அடிப்படையில் பிளாஷ் மாஸ் அப் மூலமாக மினி வரைபடங்கள், விசைப்பலகை கட்டுப்பாடுகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட உலகத்தின் எந்த இடத்திலும் கார் ஓட்ட முடியும். முதலில் கீழே உள்ள தளத்துக்கு செல்லுங்கள்.
சிறிய வரைபடங்கள்
இந்த கூகிள் வரைபடமானது பேஸ்புக் பயன்பாடு முலமாக கார் ஓட்ட அனுமதிக்கிறது . இந்த சிறிய வரைபட தளத்துக்கு சென்றதும் முதலில் உலகின் எந்தப் இடத்தில் கார் ஓட வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்கு பிடித்தமான காரை நீங்களே தேர்வு செய்து ஓட்டலாம். நீங்கள் கார் ஓடும் போது சாலையின் இரண்டு பக்கங்களிலும் எல்லைகள் காணப்படும். அந்த எல்லைகளுக்குள் நீங்கள் காரை ஓட்டலாம். இது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் .
உதாரணத்துக்கு கீழ் உள்ள காணொளியை பாருங்கள் :