
நமது தனிப்பட்ட விவரங்களை திருட்டு அல்லது தீ விபத்து ஏற்பட்டால் காப்பீடு போன்ற தேவைகளுக்கு இந்த மென்பொருள் மிகவும் கை கொடுக்கிறது. நமது வீட்டு உடைமைகள் பட்டியலை
அச்சிடுவதற்கு ஓர் வடிவமைப்பை வழங்குகிறது. இதன் நிரல் இரண்டு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நிதி தகவல், காப்பீட்டு பாலிசிகள், சேமிப்பு பத்திரங்கள், சேமிப்பு / காசோலை கணக்குகள், போன்ற தகவல்களையும் தனிநபர் சொத்து பட்டியல், டிவி / விசிஆர் உபகரணங்கள், கலைப்படைப்பு பற்றிய தகவலை சேமித்து வைக்க இடமளிக்கும் வகையில் இந்த மென்பொருளை உருவாக்கிஉள்ளனர்.
சிறப்பம்சங்கள்:
- எளிதான நிறுவல் / முழுமையான மற்றும் சுத்தமான நீக்குதல்
- கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட கோப்புகள்
- முழு உதவி அமைப்பு
- சேதமடைந்த கோப்புகள் தானியங்கு மீட்பு
- பதிவு இல்லை / உரிமைக்கான கட்டணம் இல்லை