இடுகைகள்

மார்ச் 22, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இடி இடிக்கும் போது காமா கதிர்கள் வெளிப்படும்: கண்டறிந்தனர் நாசா ஆய்வாளர்கள்

சாதாரணமாக மின்னல் தோன்றும் போது இடி இடிப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. அந்த சமயத்தில் வானில் ஆன்டிமேட்டர் துகள்கள் நிறைந்த மேகக்கூட்டம் தோன்றுவது போன்ற நிகழ்வு காணப்படுகிறது. இதனை ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வழக்கமான அணுக்களில் இருந்து வேறுபட்டு நெகட்டிவ் உட்கரு பகுதியும், பாசிட்டிவ் தன்மை வாய்ந்த எலெக்ட்ரான் துகள்களும் கொண்டது ஆன்டிமேட்டர் துகள்கள். இந்த துகள்கள் வானில் இடி இடிக்கும்போது மேக கூட்டம் போல் பூமியில் இருந்து வானத்தை நோக்கி செல்கிறது. அப்போது மின்புலம் தோன்றி காமாகதிர் வெளிப்பட்டு சிதறும் நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்வை நாசா

குடி தண்ணீரை சுத்தமாக்க வாழைப்பழ தோல் உதவும்

குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்: இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும்

கண்களின் செயல்பாடு

உ லக வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க உதவுபவை கண்கள். கண்களின் செயல்பாடு அதிசயமானது. நமது வாழ்வில் 82 சதவீத அனுபவங்கள் கண் பார்வையின் மூலமாக கிடைப்ப தாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை கண்கள். இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது. எனவே கண்களை அறிந்து கொள்வதும், இமைபோல பாதுகாப்பதும் அவசியம். க ண்ணில் `அக்வஸ்’ என்ற நிறமற்ற திரவம் உள்ளது. இது சீராக உற்பத்தியாகி வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கண்ணில் அழுத்தம் ஏற்படும். இது கிளகோமா வியாதி எனப்படுகிறது. இதனால் பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம். எனவே இதை `சைலன்ட் விஷன் ஸ்டீலர்’ என்கிறார்கள். பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சரி செய்யலாம். பாதிப்பை உணர்ந்தவர்கள் நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டாக வேண்டும். பா ர்வைக் குறைபாடு கிட்டப்பார்வை (மையோபியா- மைனஸ் பவர்). தூரப்பார்வை (ஹைபரோபியா -பிளஸ் பவர்) என இரு வகைப்படும். கிட்டப் பார்வையில் கண்ணின் அளவு பெரிதாக இருக்கும். தூரப்பார்வையில் கண்ணின் அளவு சிறியதாக இருக்கும். இவை இரண்டும்...

பாலக் பன்னீர்

க ண்களுக்கு குளுமையான பச்சைப் பசேல் நிறம், மென்மையான தன்மை மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்தது பாலக்கீரை. எலும்புகளுக்கு போஷாக்கு அளித்து வலுவூட்டும் கால்சியம் நிறைந்து நோய் தீர்க்கும் சக்தியும் இதில் உள்ளது. தற்போதைய இயந்திர வாழ்வில் மிகமிக வேகமாக சமைக்கக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பாலக்கீரை. பாலக்கீரைகளை ஆய்ந்தாலே போதுமானது. பொடியாக நறுக்க வேண்டிய தேவை இல்லை. ஆய்ந்த கீரையை தண்ணீரில் குறைந்த நேரம் (ஒரு கட்டுக்கு 4 அல்லது 5 நிமிடங்கள்) கொதிக்கவிட்டாலே போதும். மிகக்குறைந்த நேரம் கொதிக்கவிடுவதால் பாலக்கீரையில் உள்ள சத்துக்களும் வீணாவதில்லை. மிகமிக வேகமாக சமைக்கக்கூடிய பாலக்கீரையில் பன்னீர் சேர்த்து மேலும் சுவையையும் சத்தையும் கூட்டி பாலக் பன்னீர் இம்முறை செய்வோமா?   தேவையான பொருட்கள் பாலக்கீரை – 1 கட்டு எண்ணை – 8 டேபிள் ஸ்பூன் பன்னீர் – 200 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சைமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன் செய்முறை * வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய பன்னீரைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ...

இன்று இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் இன்று வெளியிடுகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு “மிக மிக அழகான இணையம்’ என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின் மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன் முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடந்த ஏழு மாதங்களில் 3 கோடியே 60 லட்சம் பேர், சோதனைத்