துபாயை குழுங்க வைத்த சாலமன் பாப்பையா பட்டிமன்றம்


துபாயில் சென்னை ஜுவல்லர்சின் சார்பில் மெகா பட்டிமன்றம் மற்றும் கல்யாண மாலை நிகழ்ச்சி 19.01.2012 வியாழக்கிழமை மாலை அல் நாஸர் லெஸர்லேண்ட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் காதல்- சமூகத்திற்கு முன்னேற்றமா ? அல்லது தடையா ? எனும் தலைப்பில்
நடைபெற்ற பட்டிமன்றத்தில் முன்னேற்றமே எனும் அணியில் பாரதி பாஸ்கர், சேஷாத்ரி, ஆர்த்தி ஆகியோரும், தடையே எனும் அணியில் ராஜா, புலவர் ராமலிங்கம், ரஞ்சனி ஆகியோரும் பங்கேற்றனர்.


சிறப்பு விருந்தினர்களாக ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீன், இயக்குநர் ஆரிஃப் ரஹ்மான், இந்திய கன்சல் அசோக் பாபு, கன்சல் சிங், இந்திய சமூக நல மையத்தின் கன்வீனர் கே. குமார், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


சிறப்பு விருந்தினர்களை சென்னை ஜுவல்லர்சின் பிரியா சிங் மற்றும் சிங் ரத்தினம் ஆகியோர் வரவேற்று பூங்கொத்து மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவித்தனர்.


கல்யாணமாலை மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை ஒலி மற்றும் ஒளிப்பதிவுக்கான ஏற்பாடுகளை மோகன் மற்றும் மீரா ஆகியோர் செய்திருந்தனர்.


ஹலோ 89.5 எஃப்.எம்., பிளாக் துலிப் பிளவர்ஸ், கொழும்பு டயர்ஸ் உள்ளிட்டோர் நிகழ்விற்கான அணுசரனையினை வழங்கியிருந்தன. நிகழ்வினை நட்ராஜ் தொகுத்து வழங்கினார்.


நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், ஆயிரக்கணக்கன பட்டிமன்ற ரசிகர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget