சர்வதேச அளவில் மொபைல்களை விற்பனை செய்வதில் இந்திய நிறுவனங்களும் அதிகமாக முன்னேறி வருகிறது. சி-333 என்ற மொபைலை சர்வதேச அளவில் வெளியிட்டு இருக்கிறது சேஸ் என்ற இந்திய நிறுவனம். இதற்கும் முன்பே ஒரு மொபைலை சர்வதேச சந்தையில் வெளியிட்டு வெற்றி கண்டுள்ளது சேஸ். இந்த சேஸ்
நிறுவனம் மங்களம் குரூப் கீழ் இயங்குகிறது.
நிறைய வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் அரிய பல வசதிகளை கொண்டதாக நிச்சயம் இருக்கும். சி-333 மொபைல் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டது. இந்த மொபைலின் தோற்றத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பார்ப்பவர்களின் கண்களை நிச்சயம் கவரும் இந்த மொபைல். பளபளக்கும் வடிவமைப்பை பெற்று வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்துவிடும் வகையில் இந்த மொபைல் இருக்கிறது.
பேட்டரி பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது வாடிக்கையாளர்களுக்கு மிக நல்ல பிள்ளையாக இருக்கும் என்று கூறலாம். ஏனெனில் இது 25 நாட்கள் ஸ்டான்-பை டைம் வசதியினை கொடுக்கும் 1,500 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டது.
அனைத்து வயதினரும் பயன்படுத்த துடிக்கும் ஃபேஸ்புக், டிவிட்டர், யாஹூ மெசன்ஜர் போன்ற சோஷியல் மீடியா வசதிகளையும் இதில் எளிதாக பயன்படுத்தலாம். இதில் ஆஸ்ட்ரோ பேக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ராகு காலம் , சுப காலம் போன்ற ஜோதிட ரீதியான விஷயங்களையும் இந்த மொபைலில் பெற முடியும். இது போன்ற சில சுவாரஸ்யத்தை கொடுக்கும் தொழில் நுட்ப வசதிகளும் இந்த சி-333 மொபைலில் உள்ளது.
இப்படி பல அற்புத வசதிகளையும் வழங்க அவதாரம் எடுத்து இருக்கும் இந்த மொபைல் ரூ.3,500 ஒட்டிய விலையில் கிடைக்கும். இது மிகவும் குறைந்த விலை கொண்ட மொபைல் என்பதால் இதை எல்லோரும் எளிதாக பெற்று பயனடைய முடியும்.