ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 22 முதல் விண்ணப்பம்!

தமிழகத்தில் வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, ஏற்கனவே ஆசிரியராக பணியில் இருப்பவர்களுக்கும், ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கும் வசதியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அளவிலும், மத்திய அளவிலும் இத்தேர்வுகள் நடத்தப்படும். மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் இணைந்துள்ள செல்லானை பூர்த்தி செய்து ஸ்டேட் பாங்கில் ரூ.500 செலுத்த வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்