Freebie Notes - குறிப்புத்தாள் மென்பொருள்


இது விண்டோவில் சுலபமாக scheduler, reminder, notepad  போன்றவற்றை கையாளக்கூடிய வகையில் உள்ள ஒருகருவியாகும் இதன்மூலம் மிகசரியான நேரத்தில் திரையில் தோன்றக்கூடிய மின்குறிப்பு ஒட்டியை (electronic sticker) உருவாக்க அனுமதிக்கின்றது மேலும் வாடிக்கையாளர் விரும்பியவாறுஇதனுடைய அளவு பின்புலம், வண்ணம், திரையில் இதனுடைய இடத்தின்நிலை ஒளியூடுருவம்தன்மை ஆகிவற்றை நம்மால் அமைத்து கொள்ள முடியும் இதிலுள்ள ஏராளமான வசதிகள் வாய்ப்புகளின்
வாயிலாக விண்டோ நோட்பேடு உரைக்கு பதிலாக வாடிக்கை யாளரை இதனை பயன்படுத்தி கொள்ள தூண்டுகின்றது மேலும் இதனுடைய ஒலி, ஒளிரும் தன்மைக்கான கருவிமூலம் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளும்படி கவர்ந்திழுக்கின்றது.
அம்சங்கள்:
1.இதன் மூலம் எளிதாக மின்குறிப்பு ஒட்டியை உருவாக்க முடியும்
2.பின்னர் இந்த மின்குறிப்பு ஒட்டியை முன்னேறிய நிலையில் பதிப்பித்தல் செய்யமுடியும்
3.குறிப்பிட்ட நாளிலும் நேரத்திலும் நடைபெறுவிருக்கும் செயலைபற்றி நமக்கு நினைவூட்டும்படி இதில் அமைக்கமுடியும்
4.வாடிக்கையாளர் விரும்பியவாறான இதனுடைய அளவு பின்புலம், வண்ணம், திரையில் இதனுடைய இடத்தின்நிலை ஒளியூடுருவம்தன்மை ஆகிவற்றை அமைத்து கொள்ளமுடியும்
5.கூடுதலான சிறிய மின்குறிப்பு ஒட்டியையும் உருவாக்கிகொள்ளமுடியும்
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:2.22MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்