
பேஸ்புக் அக்கவுன்டில் உங்களின் பெயர் சுட்டியா என்று முடிந்தால், அந்த பேஸ்புக் அக்கவுன்டு காலாவதி ஆகிவிடும் என்று ஒரு புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது அசாமில் சுட்டியா என்ற பெயர் ஒரு சமூகத்தினரின் பெயரை குறிக்கிறது.
ஆனால் இதே சுட்டியா என்ற வார்த்தை ஹி்ந்தி மொழியில் முட்டாள் என்பது போன்ற அர்த்தத்தை கொடுக்கும் வார்த்தையாக குறிக்கிறது. இதனால் சுட்டியா என்ற பெயரில் பேஸ்புக் அக்கவுன்டு
வைத்திருந்தால் அது தவறான வார்த்தையாக கருதப்பட்டு, அந்த அக்கவுன்டு காலாவதி செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால் சுட்டியா என்ற பெயரை கொண்ட அசாமை சேர்ந்த சமூகத்தினர் ஃபேஸ்புக் சின்னத்தை எரித்து, ஃபேஸ்புக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.