யூடியூபில் இணையும் பிரதமர் அலுவலகம்!


பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் இணைகிறது என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்த ஓர் விஷயம். சோஷியல் மீடியாக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். இதே போல் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் யூடியூபில் அதிக வீடியோ தகவல்களை பகிர்ந்து கொள்ள உள்ளது. ஏற்கனவே யூடியூபில் இணைந்துள்ள பிரதமர் அலுவலகம் இனி அதிக வீடியோ தகவல்களை யூடியூபில் பகிர்ந்து கொள்ளும்.
இது சம்மந்தமாக மகாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்பளாய்மெண்டு கியாரண்டி ஸ்கீம் பற்றி பிரதமர் பேசியது நேற்று யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் மக்களுக்கு இது போன்ற அரசாங்க விஷயங்களில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது வந்துள்ள சோஷியல் மீடியாவின் மூலம் புதிய தகவல்களையும் எளிதாக பெற முடியும் என்பது மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம் தான்.
அதோடு மீடியா பத்திரிக்கையின் உயர் அதிகாரியாக இருந்த பங்கஜ் பச்சவுரி பிரதமருக்கு செய்தி ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார் என்றும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget