
மொபைல்போனில் முகம் பார்த்து பேசும் வசதியை தரும் 3ஜி சேவைக்கான கட்டணத்தை 70 சதவீதம் குறைத்துள்ளது ஏர்டெல். மொபைல் கட்டணத்தில் இருந்து மின்னணு சாதன பொருட்கள் வரை விலைவாசி உயர்வையே சந்தித்து கொண்டிருந்த மக்களுக்கு, ஏர்டெல்லின் இந்த அதிரடி விலை குறைப்பு சந்தோஷமான சமாச்சாரம் தான்.
இந்த 3ஜி சேவையில் பல புதிய திட்டங்களையும் அறிவித்து இருக்கிறது ஏர்டெல்.
ரூ.10 கட்டணம் ஒரு நாள் கெடுவுடன் கூடிய 30 நிமிடம் 3ஜி சேவையை பயன்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போல் இன்னும் பல வசதிகளும் உள்ளது. சிறப்பான வேகத்தில் 3ஜி வசதியை ரூ.45 கட்டணத்தில் 150 எம்பி வரை பெறுவதற்கு 7 நாள் கெடுவுடன் கூடிய திட்டமும் புதியது.
இதுவே ரூ.1,500 கட்டணம் செலுத்தினால், 10 ஜிபி வரை ஒரு மாதத்திற்கு பயன்படுத்தலாம். போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் புதிய வசதியினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். ஸ்மார்ட்பைட் என்ற திட்டத்தின் மூலம் சிறப்பான 3ஜி சேவையை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.
கடந்த ஆண்டு 3ஜி உரிமத்தை பெற்று பல்வேறு நகரங்களில் சேவையை துவங்கியது. ஆனால், கட்டணம் அதிகமாக இருந்ததால் வாடிக்கையாளர் மத்தியில் 3ஜி சேவை வரவேற்பை பெறவில்லை.
எனவே, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தற்போது 3ஜி சேவை கட்டணத்தை 70 சதவீதம் அதிரடியாக குறைத்துள்ளது ஏர்டெல். இதனால், 3ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயரும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.