பேட் எஜுகேஷன் ஹாலிவுட் விமர்சனம்


"ஒரு கெட்டவர் ஆசிரியராக அமைந்து அதனால் சீரழியும் மாணவர்களின் கதை "பேட் எஜுகேஷன்' திரைப்படம். 1980களில் இளம் இயக்குநரான என்ரிக் தன் உதவியாளர்களுடன் கதை விவாதத்தில் இருக்கிறார். அப்போது நாடக நடிகன் ஒருவன் தன் கதையோடு வந்து என்ரிக்கை சந்திக்கிறான். அந்த நடிகன், "என்னைத் தெரியல நான் தான் உன்னுடன் படித்த இங்னசியோ' என்கிறான். ஆனால் என்ரிக்கால் அவனை அடையாளம் காண முடியவில்லை.
அந்த அளவுக்கு அவன் தோற்றத்தில் மாறியுள்ளான்.
இங்னசியோ, தன்னை நடிக வட்டத்தில் "ஏஞ்சல்' என்று அழைப்பதாக கூறுகிறான். தன் கையில் இருக்கும் "தி விசிட்' கதையை அவனின் அடுத்த படத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அதில் தனக்கு ஒரு பாத்திரம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறான். அந்த கதை நம் பள்ளி நாள்களில் நடந்த கதை என்றும் கூறுகிறான். என்ரிக் அதைப் படித்துவிட்டு மறுநாள் அதுபற்றி சொல்வதாகச் சொல்கிறான்.
"தி விசிட்' கதை 1977ல் தொடங்குகிறது. இங்னாசியோ, அந்தக் கதையில் தன் பெயரை  "சாரா' என்று மாற்றி திருநங்கையாக மாறி மேடையில் நடித்து வாழ்பவளாக எழுதியிருக்கிறான். ஒரு ஹோட்டலில் குடித்துவிட்டு வரும் இளைஞன் ஒருவனைக் கெடுத்து பணத்தைத் திருட முற்படுகிறான். ஆனால் அந்த இளைஞன் தன்னுடன் படித்த என்ரிக் என்று தெரிந்து திருடிய பணத்தை அங்கேயே வைத்துவிடுகிறான்.
அதன் பின் தன் பள்ளி பாதிரியாரைச் சந்திக்கிறான்/ள் சாரா. பாதிரியுடன் அறிமுகம் செய்து கொண்டபின் கதை பின்னோக்கிச் செல்கிறது.
1964ல் இனிமையான குரலில் சாராவாகிய இங்னசியோ பாடுவதுபோல் தொடங்குகிறது. பாதிரியாரின் தவரான பார்வை இங்னசியோவின் மேல் விழுகிறது. இங்னசியோவின் முதல் காதலும் நண்பனும் என்ரிக்தான். இருவரும் ஒன்றாகச் சுற்றுவதைப் பார்க்கும் பாதிரியார் என்ரிக்கை பள்ளியை விட்டு அனுப்பிவிடுவேன் என்று எச்சரிக்கிறார். என்ரிக்கை காப்பாற்ற பாதிரியாரின் சொல்படி நடக்கிறான் இங்னசியோ. இருந்தும் என்ரிக்கை பள்ளியை விட்டு நீக்குகிறார்.
இந்தக் கதையை படமாக்க நினைக்கிறான் என்ரிக். ஆனால் இந்தப் படத்தில் சாரா பாத்திரத்தை நானே நடிப்பேன் என்கிறான் இங்னசியோ. என்ரிக் மறுக்க, இங்னசியோ கதையை எடுத்துச் செல்கிறான். இங்னசியோவிடம் பல மாற்றங்கள் இருப்பதை உணரும் என்ரிக், கிராமத்தில் இருக்கும் அவனுடைய அம்மாவை விசாரிக்கச் செல்கிறான்.
அங்கு என்ரிக்குக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. உண்மையான இங்னசியோ இறந்து நான்கு வருடங்கள் ஆகிறது. அவனிடம் கதையைக் கொண்டு வந்தது அவனுடைய சகோதரன் ஜூஅன்.
மறுபடியும் நகரம் செல்லும் என்ரிக், ஜூஅனுக்கு அதே பாத்திரம் தருவதாகச் சொல்லி கதையில் சில மாற்றங்கள் செய்கிறான். பாதிரியார் தன் உதவியாளரை வைத்து இங்னசியோவைக் கொல்வதாக எடுக்கிறான். இந்தக் காட்சிகளைக் கண்டு அழுகிறான் ஜூஅன். அப்படிப்பட்ட நேரத்தில் கதையில் வரும் பாதிரியாரின் உண்மை நண்பர் என்ரிக்கை பார்க்க வருகிறார். உண்மையில் இங்னசியோவைக் கொன்றது அவன் தம்பி ஜூஅன் என்பது தெரியவருகிறது.
தான் எழுதிய கதையை வைத்து இங்னசியோ பாதிரியாரை பணம் கேட்டு மிரட்ட, அதே நேரத்தில் பாதிரியார் ஜூஅனுக்கு பணத்தாசை காட்டி அதிக மயக்க மருத்து கொடுத்து இங்னசியோவைக் கொலை செய்ய வைக்கிறார். இதனால்தான் அந்த காட்சி படமாக்கப்பட்ட போது அவன் அழுகிறான்.
இதனிடையே படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைகிறது. சகோதரனை கொன்ற குற்ற உணர்ச்சி ஏதும் இல்லாமல் ஜூஅன் பெரிய நடிகனாக மாறுகிறான். மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழித்த பாதிரியார் ஒரு விபத்தில் மரணமடைகிறார்.
இப்படம் சிறுவர்/சிறுமியர் மீது வன்முறையைத் தூண்டும் ஆசிரியர்கள்தான் ஆயுதங்கள் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
கேனஸ் திரைப்பட விழாவில் பலரது பாராட்டுகளைப் பெற்றதோடு, அமெரிக்காவில் ஸ்பெயின் மொழிப் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையும் நிகழ்த்தியது "பேட் எஜுகேஷன்.''

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget