ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் அழகு மயிலாக தொகுத்து வழங்கும் சிம்ரன், தெலுங்கு சீரியலில் வக்கீலாக களம் இறங்கியுள்ளார். ‘சுந்தரகாண்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாம். இதனால் விரைவில் இதனை தமிழ் பேச வைக்கப்போகின்றனராம்.
ஆந்திராவில் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதுமே விசாரிக்காமல் பெண் கொடுக்கும் நிலை அதிகமாக இருக்கிறதாம். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் அமெரிக்கா போகும் பெண்கள், புகுந்த வீட்டில் சந்திக்கும் கொடுமைகள், கடுங்காவல் தண்டனையை விட மோசமானதாம். பெண்களுக்கு நடக்கும் இந்தக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைதான் 'சுந்தர காண்டா'.
பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் வக்கீலாக வருகிறார் சிம்ரன். இதில் சிம்ரன் ஹீரோயின் இல்லை என்றாலும் சீரியலின் முக்கிய கதாபாத்திரமே தான்தான் என்பதால் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். வெளிநாட்டு மாப்பிள்ளையால் பாதிக்கப்படும் ஹீரோயினைத் தன் வாதத் திறமையால் காப்பாற்றும் வக்கீலாக வருகிறார்.
அமெரிக்க மாப்பிள்ளையாக, கையில் ஒரு கோடி புகழ் ரிஷியும் அவரது மனைவியாக சுஜிதாவும் நடிக்கின்றனர். கூடிய விரைவில் தமிழ் பேசப்போகிறது 'சுந்தர காண்டா!' இதனை சோலைராஜனிடம் உதவியாளராக இருந்த ஜெய் கி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.