.jpg)
கிரீன் மூவிஸ் சார்பில் மல்லிகா அஜய், கே.கணேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் அஞ்சாதவன்
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் செய்கிறார் முரளி.ஜே. இது இவருக்கு முதல் படம். பல படங்களில் இணை, துணை இயக்குநராக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.......,. இந்தப் படத்தில் புதுமுகம் அஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சபனா, சுஜி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் கராத்தே ராஜா, ரஞ்சன், வெங்கல் ராவ், சின்ராசு, கேசிங், எம்.இ.பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஒரு இளைஞனின் வீர தீர செயல்களும், காதலையும் மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தின் படபப்பிடிப்பு திருச்சி, நத்தம், முசிறி போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. இந்தப் படத்திற்கு குரு பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.எல். செல்வதாசன் இசையமைக்கிறார். பாடல்களை எம்.எல்.கதிரவன் எழுதி உள்ளார். கலை – எஸ்.தேவராஜ், படத்தொகுப்பு பி.எஸ்.வாசு, நடனம்- ரவிதேவ், சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா, தயாரிப்பு நிர்வாகம்- வேலுமணி, மக்கள் தொடர்பு – ஜி.பாலன்
ஏவி.எம் ஸ்டுடியோவில் ஜூன் மூன்றாம் தேதி பாடல் பதிவுடன் துவங்கிய இந்தப் படம், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
படத்தை இயக்கும் முரளி.ஜே. கூறும்போது, “குத்துச் சண்டை வீரனாக வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஹீரோ, சென்னை வருகிறான். இங்கு அவன் சந்திக்கும் பிரச்னைகளும் அதை எதிர்த்து எப்படி வெற்றிபெறுகிறான் என்பதும் கதை. இருக்கும்போது பெற்றவர்களின் அருமையை உணராத பிள்ளைகள் அவர்களை இழந்த பிறகுதான் முழுமையாக உணர்கிறார்கள் என்ற மெசேஜையும் சொல்கிறோம். குத்துச் சண்டை வீரன் ஒருவரின் நிஜ வாழ்க்கை அடிப்படையில் திரைக்கதை அமைத்து உருவாக்கப்படுகிறது” என்றார்.