அஜித்தின் பில்லா 2 மே 1 அவரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. பெப்சி ஸ்டிரைக் மற்றும் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் அது முடியவில்லை. ஆனால் முக்கியமான பிறந்த தினம் ஒன்றில்தான் பில்லா 2 வெளியாகிறது. அது விஜய்யின் பிறந்தநாள்.
ஆமாம், பில்லா 2 ஜுன் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் பில்லாவின் கடந்த காலத்தை அதாவது சாதாரண ஒரு இளைஞன் எப்படி எல்லோரும் பயப்படும் பில்லாவாக மாறினான் என்பதை காட்டுகிறது. பார்வதி ஓமனக்குட்டன் ஹீரோயின். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பில்லா 2 ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வசூலை முறியடிக்குமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.