
5. உருமி
சந்தோஷ் சிவனின் படம் சென்ற வார இறுதியில் 3.6 லட்சங்களை வசூலித்து சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இதுவரையான மொத்த சென்னை வசூல் 44 லட்சங்கள்.
4. கிருஷ்ணவேணி பஞ்சாலை
சினிமா நபர்களால் ரொம்பப் பிரமாதமான படம் என்று சொல்லப்பட்ட கிருஷ்ணவேணி பஞ்சாலை பாக்ஸ் ஆபிஸில் பஞ்சராகியிருக்கிறது. வெளியான முதல் மூன்று தினங்களில் 3.64 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
3. தடையறத்தாக்க
அருண் விஜய்யின் ராசி இந்தப் படத்திலும் தொடர்கிறது. சென்ற வார இறுதியில் 6.02 லட்சங்களை வசூலித்த இப்படம் 38 லட்சங்களுடன் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது.
2. மனம் கொத்திப் பறவை
சிவ கார்த்திகேயன் நடித்திருக்கும் மனம் கொத்திப் பறவை படத்தை எடுத்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை பெற்று வருவது ஆச்சரியம். சென்ற வார இறுதியில் இப்படம் 20.4 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 93 லட்சங்கள்.
1. கலகலப்பு
மீண்டும் அதே முதல் இடத்தில் கலகலப்பு. லாஜிக்கே இல்லாத இந்த காமெடிப் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்குவதிலிருந்து நமது ரசனையின் தரத்தை அறிந்து கொள்ளலாம். இதன் சென்ற வார இறுதி வசூல் 25.7 லட்சங்கள். இதுவரை 5.8 கோடிகளை வசூல் செய்துள்ளது.