
ஆர்யா, அனுக்ஷா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இரண்டாம் உலகம். இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், ராதிகா சரத்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தில் அனுக்ஷாவுக்கு இரு வேடங்கள். அது என்ன வேடம்னா? குடும்ப பெண்ணாகவும், பழங்குடியின பெண்ணாகவும்தான் நடிக்கிறார். இந்தப் பழங்குடியின பெண் வேடத்தில்
நடிப்பதற்காக அனுகஷா முறையாக தற்காப்பு கலை பயின்றுள்ளார். தமிழில் முதன்முறையாக அவர் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார்.