
விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார்.
படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காதல் ரோஜாவே படத்தில் நடித்த பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் சிங்கப்பூரில் நடந்த ஐஐஎப்ஏ விழாவில் வெளியிடப்பட்டது. டிரெய்லரைப் பார்த்தே அனைவரும் அசந்துவிட்டார்களாம்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம் படத்திற்காக கமலுக்கு ரூ.45 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்று தயாரிப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. படத்திற்காக தன்னை வருத்திக்கொள்ளும் கமலுக்கு கோடி, கோடியாக கொடுக்கலாம், தப்பில்லை.