அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 படம் ரிலீஸாகி சில வாரங்களே ஆகின்ற நிலையில் அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் தெரிந்திருக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடிக்கும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது. மும்பையிலும் பெங்களூரிலும் எடுக்க திட்டமிடப்பட்ட போது மழை குறுக்கிட்டதால் அந்த ஷெடியூலை மாற்றிவிட்டனர்.
சென்னை ஷூட்டிங் முடிந்த பிறகு விஷ்ணுவர்தன் டீம் மும்பை சென்று 40 நாட்கள் ஷூட்டிங நடத்தவிருக்கிறார்களாம்.
எப்படியும் அக்டோபரில் ஷூட்டிங் முடிந்து, டிசம்பரில் ரிலீஸாகும் என்பது படக்குழுவின் தகவல். சென்னை ஷூட்டிங்கின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் அஜித்துடன் சப்போர்ட் நடிகராக நடிக்க தெலுங்கு நடிகர் ராணாவை படத்தில் சேர்த்திருப்பதாக தெரிகிறது. ராணாவின் கதாபாத்திரத்திற்கான ஸ்கிரிப்டையும் விஷ்ணுவர்தன் எழுதி முடித்துவிட்டாராம். இந்த தகவல் விரைவில் அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம்.
அஜித்குமார் நடித்த பில்லா-2 ரிலீஸான சில மாதங்களிலேயே அடுத்த படமும் ரிலீஸாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.