ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் அமேஸிங் ஸ்பைடர்மேனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது டுவென்டியத் சென்சுரி பாக்ஸின் ஐஸ் ஏஜ்- கான்டினென்டல் ட்ரிஃப்ட். இது ஐஸ் ஏஜ் சீரிஸின் நான்காம் பாகம்.
வெளியான முதல் வார இறுதியில் 46 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இது யுஎஸ் வசூல். ஸ்பைடர்மேன் 35 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.
முதலிடத்தைப் பிடித்தாலும் வசூல் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஐஸ ஏஜின் மூன்றாம் பாகமான மெல்ட்டவுன் முதல் வார இறுதியில் 68 மில்லியன் டாலர்களை 2006-லேயே சம்பாதித்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நான்காம் பாகத்தின் ஓபனிங் வசூல் மிகக்குறைவு.
அதேநேரம் சர்வதேச அளவில் ஐஸ் ஏஜ் - கான்டினென்டல் ட்ரிஃபடுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் இதன் முந்தையப் பாகமான டான் ஆஃப் தி டயனோசர் படத்தின் வசூலை எட்டும் என நம்புகிறார்கள். இப்படத்தின் வசூல் ஏறக்குறைய 886.7 மில்லியன் டாலர்கள்.
அனிமேஷன் படம் ஒன்றின் நான்காம் பாகம் வெளியாவது அரிது. அதிலும் இப்படியொரு வசூல் எதிர்பார்க்கக் கூடியதல்ல. இதுவரை இந்த நான்கு சீரிஸும் சேர்த்து 2.2 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவொரு சாதனை.