கணேஷ் எண்டர் பிரைசஸ் சார்பில் ஸ்டார் கணேஷ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கும் படம் சேலத்து பொண்ணு. இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக கமலி நடிக்கிறார். சுப்புராஜ், கோவை செந்தில், போண்டா மணி, செல்வகுமார், நடேசன், ஒகோபால், மதுரை சரோஜா, கர்ணா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னை புறநகரில் வசிக்கும் வசதியான பண்ணையாரின் மகன் துரை வீட்டுக்கு அடங்காமல், நண்பர்களுடன் தண்ணி அடிப்பது ஊர் சுற்றுவது என திரிகிறான்.
அவன் அத்தை மகள் ஒரு விழாவுக்காக சேலத்தில் இருந்து சென்னை வருகிறாள். துரை நடத்தைகள் கண்டு எரிச்சலடைந்து அவனை திருத்த முயற்சிக்கிறாள் துரை அடங்கினான என்ற கதை கருவில் தயாராகிறது.
ஒளிப்பதிவு: வினோத், இசை: ஆதீஸ், எடிட்டிங்: வெங்கட், ஸ்டண்ட், மிரட்டல் செல்வம். சென்னை, மணிமங்கலம், படப்பை, பாண்டிச்சேரி, ஒகேனக்கல் சேலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஆகஸ்டில் ரிலீசாகிறது.