நயன் பாணியில் நட்பை தேடி சோனாக்‌‌ஷி !


பிரபுதேவாவுக்கு கன்னி ராசியாக இருக்க வேண்டும். எப்போதும் ஒரு இளம் பெண்ணின் பெயர் அவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும், கர்ணனின் கவசக்குண்டலம் மாதி‌ரி.நயன்தாராவிடன் டூ விட்ட பிறகு ஒத்தை ஆளாக ஒன்றிரண்டு வாரம் இருந்திருப்பார். அதற்குள் சோனாக்‌‌ஷி சின்காவுடன் சிண்டு முடிந்துவிட்டார்கள். அதாவது ஷாப்பிங் போன்ற சில்லறை வேலைகளுக்கு பிரபுதேவாவுக்கு உதவி செய்கிறவர் சோனாக் ஷிதானாம். உண்மையா என்பது அந்த இருவருக்கும் தான் வெளிச்சம்.



லேட்டஸ்டாக அக் ஷய்யின் ஓ மை காட் படத்தில் பிரபுதேவாவும், சோனாக் ‌‌ஷியும் இணைந்து நடனமாடுகிறார்கள். கோ‌ரியோகிராஃப் பிரபுதேவா. இவரே சோனாக்‌‌ஷிக்கு நடனம் சொல்லித் தந்திருக்கிறார்.


ரவுடி ரத்தோர், ஜோக்கர், ஓ மை காட் என்று தொடர்ந்து சோனாக் ‌ஷியும் அக் ஷய் குமாருடனே நடிக்கிறார். அம்மணிக்கு இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் எண்ணமே இல்லை போலிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்