கோச்சடையான் வெளியீடு - புதிய தகவல்


ரஜினி தற்போது நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராப், சரத்குமார், நாசர், ஷேபானா, ஆதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் படங்களின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும்
என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் தீபாவளிக்கு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் கோச்சடையான் படத்தினை தயாரித்து வரும் ஈராஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 


அதில், கோச்சடையான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் டிவி உரிமையை ஜெயா டிவி வாங்கி இருக்கிறது. தெலுங்கு உரிமையை கணபதி பிலிம்ஸ் பெற்றிருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டோக்கியோவிலும், பிரிமியர் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


இந்த வருடத்தின் இறுதியில் ‘கோச்சடையான்’ வெளியாகும் என்பதால், ரஜினியின் பிறந்த நாளான 12-12.2012 அன்று இப்படத்தை வெளியிடக்கூடும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்