WinToFlash - பூட்டபிள் இயங்குதள யு.எஸ்.பி உருவாக்கும் மென்பொருள் 0.7.0053


கணணிகள் இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமாகும். Hard Disk-ல் நிறுவப்படும் இவ்இயங்குதளம் சில சந்தர்ப்பங்களில் கோளாறுகள் காரணமாக இயங்க மறுக்கும். முக்கியமான தருணங்களில் ஏதாவது கோப்புக்களை குறித்த கணணியிலிருந்து பெறவேண்டுமெனில் திண்டாட வேண்டியிருக்கும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்கி வைப்பதன் மூலம் அதனை பயன்படுத்தி கணணியை இயக்கி அத்தகைய தருணங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம். சரி இப்பொழுது Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.


தேவையானவை


1. Windows 7 or Vista ISO.


2. 4GB கொள்ளளவையுடைய Pen drive(4GB கொள்ளளவையுடைய Pen drive எனின் Windows XP பயன்படுத்த முடியும்).


செயல் முறை


1. Pen drive-ஐ கணணியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.


2. Pen driveல் ஏதாவது முக்கியமான தரவுகள் காணப்படின் அவற்றை Backup எடுத்துக் கொள்ளவும். (காரணம் - இச்செயன்முறையின்போது பென்டிரைவ் ஆனது போர்மேட் ஆகிவிடும்).


3. கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கில் WinToFlash tool எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.


4. பின்பு அந்த மென்பொருளை இயக்கி Windows 7, Vista, அல்லது XP DVD கோப்புக்களை தேர்ந்தெடுக்கவும்.


5. இப்பொழுது Click Create button -ஐ அழுத்தினால் சில நிமிடங்களில் Bootable விண்டோஸ் யு.எஸ்.பி உருவாக்கப்பட்டு விடும்.
Size:25.21MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget