மிரட்டலை விரட்டிய நான் ஈ


5. பில்லா 2
சென்னையில் இதுவரை 7.97 கோடிகளை வசூலித்திருக்கும் பில்லா 2 சென்ற வார இறுதியில் 1.44 லட்சங்களை வசூலித்து 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் வார நாட்கள் வசூல் 1.2 லட்சங்கள்.

4. ப‌னி‌‌த்து‌ளி
சென்ற வாரம் வெளியான பனித்துளி ரசிகர்களின் எதிர்பார்ப்பை துளியும்
நிறைவேற்றவில்லை. இதன் வார இறுதி வசூல் 2.03 லட்சங்கள்.

3. எப்படி மனசுக்குள் வந்தாய்
இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 21.8 லட்சங்கள். அறிமுகமில்லாத நடிகர்களின் படம் என்ற வகையில் இதுவொரு நல்ல ஓபனிங் என்றுதான் சொல்ல வேண்டும்.

2. மிரட்டல்
இரண்டாவது வார இறுதியிலேயே படம் மிகப் பெ‌ரிய ச‌ரிவை சந்தித்திருக்கிறது. இதுவரை 1.28 கோடியை வசூலித்திருக்கும் படம் சென்ற வார இறுதியில் 31.8 லட்சங்களையும், வார நாட்களில் 24 லட்சங்களையும் வசூலித்துள்ளது.

1. நான் ஈ
இதை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். பல வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது இடத்திலிருந்து முதலிடம். இதுவரை இந்த தெலுங்கு ஈ சென்னையில் 5.8 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 36 லட்சங்களையும். வார நாட்களில் 30 லட்சங்களையும் தனதாக்கியுள்ளது. இப்படியே போனால் பில்லா 2, வேலாயுதம் வசூல்களை அனாயசமாக தாண்டிவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்