
இந்திய சினிமாவில் முதல் முறையாக புரொஃபஷனல் கேம்ஸ் மற்றும் முழுமையான காமிக்ஸ் வடிவிலும் வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான் திரைப்படம். இதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளிமனோகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "கோச்சடையான் ஆரம்பித்த நாளிலிருந்தே, இந்தப் படத்தின் தீமை மையமாக வைத்து கேம்ஸ் சிடிக்கள்
வெளியிட வேண்டும் என்பதும் எங்கள் இலக்காக உள்ளது. இந்த யோசனையைச் சொன்னவரும் சௌந்தர்யாதான். பக்கா கேம்ஸ் சிடி வெளியிட இதைவிட பொருத்தமான படம் இருக்கிறதா என்ன?
இன்னொன்று இந்திய சினிமாவில் முதல்முறையாக ஹாலிவுட்டுக்கு நிகராக கேம்ஸ் சிடி வெளியாகும் படம் இதுவே. இதற்கு முன் ஓரிரு படங்களுக்கு வந்திருந்தாலும் அவை பெயரளவுக்குதான் இருந்தன.
புரொபஷனலாக கேம்ஸ் சிடி வெளியாகவிருப்பது கோச்சடையானுக்குத்தான். சர்வதேச அளவில் ஜாம்பவானாக உள்ள நிறுவனங்கள் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசிக் கொண்டுள்ளனர்.
அடுத்து கோச்சடையான் படத்தை அப்படியே காமிக்ஸ் புத்தமாகக் கொண்டுவரும் திட்டம். பலர் எங்களை அணுகி இதற்கான உரிமையைக் கேட்டுள்ளனர். இந்தியாவின் மிகச் சிறந்த காமிக் பப்ளிஷர்கள் கோச்சடையான் காமிக்ஸ் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர்," என்றார்.