
இன்றைய இயக்குநர்கள் 'வாய்'ப்பை நன்றாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என மறைமுகமாக இசையமைப்பாளர் அனிருத் - ஆன்ட்ரியா லிப் டு லிப் முத்தத்தை கிண்டலடித்தார் நடிகர் / இயக்குநர் பார்த்திபன். சென்னை நந்தம்பாக்கத்தில் விக்ரம் நடித்த ‘தாண்டவம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பார்த்திபன், "‘தாண்டவம்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 25 படங்களுக்கு அவர் இசையமைத்து விட்டார். இசையமைப்பாளர்களுக்கு
இன்றைய தினம் நிறைய ‘வாய்'ப்புகள் கிடைக்கின்றன. ‘வாய்'க்குள்ளே மைக் வைத்து பாடுகிறார்கள். இன்னும் சிலர் வேறு விஷயங்களுக்கும் வாயை பயன்படுத்துகின்றனர். ‘வாய்'...ப்பை நல்லாவே பயன்படுத்துகின்றனர்," என்றார்.
பார்த்திபன் பேச்சு அரங்கை கலகலக்க வைத்தது. விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த வாய் யாருடையதுன்னு நல்லா தெரியும் என ரசிகர்கள் சவுண்ட் விட்டனர்.
விழாவுக்கு தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வந்திருந்தார். கிட்டத்தட்ட படத்தின் இன்னொரு ஹீரோ அவர். அவர் பேசுகையில், "எனக்கு சென்னை முக்கியமான இடம். இங்குதான் பிறந்தேன். பள்ளி படிப்பையும், காலேஜ் படிப்பையும் முடித்தேன். கட் அடிச்சி பிட் அடிச்சி பாஸ் பண்ணினேன். இங்குதான் இட்லி சாம்பார் சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
விக்ரமுடம், ‘தாண்டவம்' படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்ரம் பெரிய நடிகர், நல்ல மனிதர். துளியும் அவரிடம் பந்தா இல்லை," என்றார்.
விழாவுக்கு ஏராளமான விக்ரம் ரசிகர்கள் வந்திருந்தனர். விக்ரமைப் பார்க்கும்போதெல்லாம் ஏகத்துக்கும் விசிலடித்து உற்சாகம் காட்டினர்.
விழாவில் ‘தாண்டவம்' பாடல் சி.டி.யை இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி வெளியிட இயக்குனர்கள் பி.வாசு, ஏஎல் விஜய், வெற்றிமாறன், ராஜா, கருணாகரன், மிஸ்கின், சிம்புதேவன், காந்திகிருஷ்ணா, புஷ்கர் காயத்ரி, விஜி, எல்ரெட் குமார், சங்கர் தயாள் பெற்றுக்கொண்டனர்.
கார்த்தி, நடிகை எமி, நாசர், பரத், இயக்குநர் பிரியதர்ஷன், எடிட்டர் மோகன், தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராய்கபூர், கே.இ. ஞானவேல் ராஜா, எஸ்.ஆர். பிரபு, யு டி.வி. தனஞ்செயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.