யுகம் திரை விமர்சனம்


கதாநாயகியின் மரணத்திலிருந்து கதை துவங்குகிறது. கொலைப் பழி கதாநாயகன் மேல் விழுகிறது. போலீஸ் விசாரணையில் கதை துவங்கும்போதே எதிர்பார்ப்பாகிவிடுகிறது. ராகுல் மாதவும், தீப்தியும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி. நிறைவாக போய்க் கொண்டிருக்கும் திருமண பந்தத்தில் திடீர் என்று ஒரு ராங் கால் குறுக்கிடுகிறது. தீப்திக்கு வரும் ஒரு ராங் காலில் உன் மனைவியை கொன்னுடு. என்னால இதுக்குமேல பொறுக்கமுடியாது என்று சொல்கிறது ஒரு பெண் குரல்.
அதேபோல் ராகுவ் மாதவிடம் இன்றைக்குள் உன் புருஷனை கொன்னுட்டு வந்துடுன்னு கூறுகிறது ஒரு ஆண் குரல். இருவருக்குள்ளும் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், நம்பிக்கை துரோகத்திற்கும் இடையே மனப்போராட்டம் நடக்கிறது. இந்நிலையில் தவறான அழைப்பு என்பது மெல்ல புரிந்து இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ளும் வேளையில் எதிர்பாராத திருப்பம். இறுதியில் தீப்தி இறந்ததற்கான காரணம் கிடைக்கிறது. 


கதாநாயகனனான ராகுல் மாதவ் பின்பகுதி காட்சியில் உணர்வை காட்ட வேண்டிய நடிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார். மனைவி மீது சந்தேகம் வந்தாலும் இறுக்கமாகவே இருப்பதும், மனைவியை அழுத்தமாக முறைப்பதும் சரியான பொருத்தம். 


கதாநாயகியான தீப்தி கணவன் இரவு தன்னை கொன்று விடுவானோ என்று ஒவ்வொரு நொடியும் நடுங்குவது நல்ல நடிப்பு. கடைசியில் பரிதாபப்பட வைத்திருக்கிறார். சூப்பர் குட் லட்சுமணன் அன்ட் கோ கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். 


பொன்ராஜ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார். இயக்குனர் ஸ்ரீபவன் சேகர் குறைவான கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு அடுத்து என்ன எதிர்பார்ப்பில் புத்திசாலித்தனமாக கதையை கொண்டு போயிருக்கிறார். கதையில் லாஜிக்தான் உதைக்கிறது. இவரது ஒளிப்பதிவிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. 


ஆரம்பத்தில் உருக்கமான காதலை வெளிப்படுத்தும் தம்பதிகள், போனில் வரும் ஒரு ராங் காலை வைத்துக் கொண்டு கணவன் கொலை செய்து விடுவானோ என்று நடுங்குவதும், மனைவி தப்பானவளே என்று அவளை சந்தேகப்படுவதும் நம்பும் படியாக இல்லை. அந்த கணத்தில் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் சின்னதொரு விளக்கமாகவே கேட்டுக் கொள்ளமாட்டார்களா? என்று தோணுகிறது. அதேபோல் கதாநாயகி இறப்பதிலும் அழுத்தம் இல்லை. 


இடைவேளைக்குப் பிறகான காட்சிகளை இவ்வளவு நீளமாக இழுத்திருக்க வேண்டாம். மற்றபடி குறைவான பட்ஜெட்டில் நல்ல திரைக்கதை இருந்தால் வெற்றியடைய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget