துள்ளி எழுந்தது காதல் திரை முன்னோட்டம்


ராஜா, அனுஷ்கா, ஹ‌ரிப்‌ரியா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெ‌ரிய வெற்றியை சந்தித்தப் படத்தை துள்ளி எழுந்தது காதல் என்ற பெய‌ரில் தமிழில் வெளியிடுகின்றனர். பெய‌ரிலேயே இதுவொரு ரொமாண்டிக் ஃபிலிம் என்பது தெ‌ரிந்திருக்கும். இந்தப் படத்தை இயக்குனர் கிருஷ்ணவம்சியிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீஹ‌ரி நானு இயக்கியுள்ளார். ராஜா, ஹ‌ரிப்‌ரியா, அனுஷ்கா இவர்களுடன் பூமிகாவும் கல்லூ‌ரி பேராசி‌ரியர் வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழில் இந்தப் படத்தை அ‌ஜிதா வேல்முருகன், ஸ்ரீஹ‌ரி நானு, சகா.செந்தில் குமார் இணைந்து வெளியிடுகின்றனர். படத்துக்கு போபோ சசி இசையமைத்துள்ளார். பாடல்கள் யுகபாரதி. 

ஆர்.‌ஜி.குருவாயூரப்பன் வெளியிட்டிருக்கும் இந்தப் படம் நாளை திரையரங்குகளுக்கு வருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்