காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம் என்று வேகமாக வளர்ந்த சுனைனாவுக்கு சில படங்கள் ப்ளாப் ஆனதால் மார்க்கெட் குடை சாய்ந்தது. இதனால் சிறிது காலம் ஆந்திராவில் ஒதுங்கிய அவரை சமர் படத்துக்காக மீண்டும் கோலிவுட்டுக்கு கொண்டு வந்தனர். அதனால் பாண்டி ஒலிபெருக்கிநிலையம், நீர்ப்பறவை என்று சில படங்கள் அவருக்கு புக்காகின. இதனால் விஷால் வரை எட்டிப்பிடித்தாச்சு அடுத்து மேல்தட்டு ஹீரோக்களை இதே வேகத்தில் கேட்ச் பண்ணி விட வேண்டும்
என்று தீவிரமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு திரைக்குப்பின்னால் தூது விட்டு வந்தார் நடிகை.
ஆனால் அவர் குறி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, எதிர்பாராதவிதமாக பாண்டி ஒலிபெருக்கி நிலையம் வெளியாகி தோற்று விட்டது. இதனால் நிலைதடுமாறி சறுக்கி விழுந்தார் சுனைனா. இந்த நிலையில், கைவசமுள்ள சமர், நீர்ப்பறவை படங்களின் கதி என்னவாகப்போகிறதோ? என்று திக் மனநிலையுடன் மேற்படி படங்கள் திரைக்கு வரும் நாளுக்காக காததிருக்கிறார் சுனைனா.