அங்காடித்தெரு அஞ்சலியை கலகலப்பு படம் மாஸ் நடிகையாக்கி விட்டது. அதுவரையில் அவரை கண்டுகொள்ளாதிருந்த அண்டை மாநில இயக்குனர்கள் அந்த படத்தில் அவர் நறுக் ஆட்டம் போட்டதைப்பார்த்து ஆடிப்போனார்கள். இந்த குடும்ப நடிகைக்குள் இப்படியும் ஒரு அயிட்டம் நடிகை குடியிருக்கிறாரா? என்று அசந்து போனார்கள். அதனால் அதே மூடில் அஞ்சலியை ஆந்திராவுக்கு வரவைத்து கேட்ட சம்பளத்தை கொடுத்து கால்சீட்டையும், அஞ்சலியையும் கேட்ச் பண்ணி விட்டனர்.
என்னதான் தமிழ் சினிமா தன்னை வளர்த்தது என்றாலும், தெலுங்கு தாய் மொழியாயிற்றே அதனால் அடுத்து அங்கு முகாம்போட்டு கல்லாக்கட்ட தீர்மானித்து விட்டார் அஞ்சலி. அதனால் தமிழில் நடித்து வரும் சேட்டை உள்ளிட்ட சில படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு ஆந்திர கரையோரம் முழுநேரமும் ஒதுங்க இருக்கிறார் அம்மணி.