சுண்டாட்டத்தில் அசத்தியிருக்க்கும் நடிகை அருந்ததி


எஸ்.ஏ.சந்திரசேகரின், "வெளுத்துக்கட்டு மற்றும் "வேடப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ள அருந்ததி இப்போது, "சுண்டாட்டம் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இர்பான், மது, நரேன் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். சினிமாவில், பல்வேறு விளையாட்டை வைத்து, படங்கள் வந்துள்ளன. இந்தப் படத்தில், கேரம் விளையாட்டை மையமாக வைத்து, கதை  சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரம்மா ஜி.தேவ். இதில், நாயகி அருந்ததிக்கு, கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரம்.
தன் கேரக்டரின் தன்மையை அப்படியே உள்வாங்கி, அற்புதமாக நடித்திருக்கிறார் அருந்ததி. சமீபத்தில், உணர்ச்சிகரமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில்,  "ரிகர்சல் கூட எடுக்காமல், ஒரே, "டேக்கில், உணர்ச்சிகளை கொட்டி நடித்து, அசத்தியிருக்கிறார் நடிகை.  குடும்பப்பாங்கான தோற்றத்தில் இருக்கும் அருந்ததி, பாடல் காட்சிகளில்,  ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்