ரசிகர்களுக்கு இளமை விருந்து படைக்க வரும் காவ்யா சிங்!

வெங்கடேஸ்வரா டெலிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், "சாரி டீச்சர்! இதில், ஆர்யாமேன் நாயகனாகவும், காவ்யாசிங் நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரவீன் இம்மாடி இசையமைக்க, பாடலாசிரியர் ராஜேஷ், பாடல்களை எழுதி உள்ளார். அருண் வசனம் எழுத, ஸ்ரீசத்யா இயக்குகிறார். காவ்யா சிங்கின் அழகில் மயங்கும் நாயகன் ஆர்யாமேன், அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் காவ்யாவோ, ஆர்யாமேனை விட, வயதில் மூத்தவள், கல்லூரிப் பேராசிரியை எனத் தெரிந்த பிறகும், தன் காதலை திரும்பப் பெறாமல், அவள் பின்னாடியே
அலைகிறான் நாயகன். "குரு ஸ்தானத்தில் இருக்கும் என் பின்னால் நீ அலைவது தவறு என, நாயகி எவ்வளவோ எடுத்து சொல்லியும், தன் காதலின் தீவிரத்தை, நாயகன் குறைத்துக் கொள்ளவில்லை. அவன் திருந்தினானா, இல்லையா என்பது தான், கதையின் முடிவு. "இதில், கல்லூரிப் பேராசிரியை வேடத்தில், அடக்க ஒடுக்கமாக வரும் காவ்யாசிங், பாடல் காட்சிகளில், படு கவர்ச்சியாக வந்து, இளமை விருந்து படைத்திருக்கிறார்என்கிறார், படத்தின் இயக்குனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்