மாற்றான் திரை விமர்சனம்

முதல் ஷாட்டிலேயே ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் பிரசவம். ஒருவர்க்கு மட்டும் தான் இதயம் இருப்பதை சொல்லும் டாக்டர் “ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும்” என்று சொல்ல, தாயார் ” நான் பார்த்துக்குறேன் ” என்று போராடி (கணவர் + டாக்டர்க்கு கன்னத்தில் அறை) வளர்க்கிறார். சூர்யா தந்தை ஒரு மில்க் பவுடர் தொழில் செய்து கொழிக்கிறார். அதனை பற்றி துப்பறிய வருகிறார் ஒரு வெளிநாட்டு பெண்மணி.
முதலில் அவர் தான் வில்லி என்பது போல் செல்லும் கதை அப்படியே உல்ட்டா அடித்து சூர்யா தந்தை பக்கம் கையை காட்டுகிறது. தன் தொழிலில் வெற்றி பெற எதுவும் செய்ய தயாராய் இருக்கும் சூர்யாவின் தந்தையினால் ஒரு சூர்யா இறக்க, அவரது இருதயம் இன்னொரு சூர்யாவிற்கு பொருத்தப்படுகிறது.

இங்கு இடைவேளை.

அதன் பின் பிழைத்த சூர்யா தன் தந்தையின் தகிடுதத்தத்தை வெளிகொணர்ந்து வெற்றி பெறுவார் என எந்த சிறு குழந்தையும் சொல்லிவிடும்.

ப்ளஸ்

கே. வி ஆனந்த ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாச கதைக்களன் எடுப்பார். அறிவியல் டச் இருந்த அவரது கனா கண்டேன் போல இதுவும் அறிவியல் பின்னணியில் அமைந்த படமே. ஜெனடிக், ஆராய்ச்சி போன்றவற்றை எவ்வளவு தூரம் எளிமைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் செய்துள்ளார். வித்தியாச கதை என்னும் விதத்தில் பாராட்டுகள்

முதல் பாதியில் சூர்யாவின் உழைப்பு அசரவைக்கிறது. சுஜாதாவின் கணேஷ் வசந்த் போல ஒருவன் புத்திசாலி மற்றவன் வாலு என்ற அந்த இரு பாத்திரங்கள் மிக சுவாரஸ்யம்.
மூன்று பாட்டுகள் அருமை. படமாக்களில் அப்படியே கே. வி ஆனந்த் டச் தெரிகிறது. “கோ”- வில் வரும் அமளி துமளி பாடல் மாதிரியே நாணி கோணி பாடலின் சில லொகேஷன்கள் உள்ளது.

காஜல் அகர்வாலை வெறும் பாடல்களுக்கு மட்டுமின்றி கதையோடு இணைந்து வரும் விதத்தில் நன்கு பயன்படுத்த, காஜல் அழகு, டான்ஸ் ஆகியவற்றுடன் நடிக்கவும் செய்துள்ளார்

சூர்யாவின் தந்தையாக நடிக்கும் நடிகர் யார் என தெரியவில்லை. பணக்கார தொனி மற்றும் குள்ளநரித்தனம் சரியே வெளிப்படுகிறது

இரட்டையர்கள் கலக்கும் முதல் பாதி நிச்சயம் பெரிய ப்ளஸ். ஆண்- பெண் கிஸ் அடிப்பதை “தல கறி சாப்பிடுறான்” என்பதாகட்டும் போலிஸ் ஸ்டேஷன் சென்று பெண் போலீசிடம் ” நாங்க இந்த பொண்ணை லவ் பண்றோம் ” என்பதாகட்டும் கலக்கல். (அதுவும் அந்த பெண் போலிஸ் ரெண்டு பேரும் ஒட்டி இருக்கீங்களே “அப்போ” என்ன பண்ணுவீங்க என்பதும் அதற்கு சூர்யா பதிலும் தியேட்டரில் சவுண்டை கிளப்புது)

மைனஸ் 
படத்துக்கு உடனடி தேவை கத்திரி. படம் மூன்று மணி நேரம் ஓடுதுன்னு நினைக்கிறேன். கடைசியில் ஏராளமான மக்கள் உட்கார முடியாமல் எழுந்து போய் கதவுக்கு பக்கத்தில் நின்ற பின்னும் பத்து நிமிஷம் படம் ஓடுது 

இடைவேளைக்கு பின் தந்தையை மாட்டி வைக்க போகிறார் என்பது தான் கதை என்று அனைவருக்கும் தெரிந்தாலும், கழுத்தை சுற்றி மூக்கை தொடும் கதை போல சற்று போர் !

ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருக்கு. கே. வி ஆனந்த் பொதுவாய் இதில் நிறைய ஜாக்கிரதையாய் இருப்பார். ஒட்டி பிறந்தவர்களில் ஒருவர் தான் கார் ஓட்ட முடியும். (அவர்கள் உருவ அமைப்பு மற்றும் நமது காரில் ஸ்டியரிங் உள்ளிட்டவை ஒரே பக்கம் இருப்பதால்) ஆனால் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் ஓட்டுகிறார். போலவே உளவு பார்க்க வந்த பெண்ணை தெரிந்தும் கூட அப்படியே சூர்யா அப்பா அனுப்புவதற்கும் எந்த லாஜிக்கும் இல்லை.
ப்ளே பாயாக இருக்கும் அகிலன் காஜலையும் சைட் அடிப்பதாய் காட்டுகிறார்கள். அப்புறம் அவரே விமலன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுகிறார். அதை விட கொடுமை விமலனை லவ் பண்ணும் காஜல் அவர் இறந்ததும் “காதல் போயின் காதல்” என உடனே மற்றவரை லவ் பண்ணுகிறார்.

உக்ரேனியா (தானே அது?) செல்லும் போது கதை ஒழுங்கா தான் இருக்கு. அங்கு நடப்பவை ஒரு லெவலுக்கு மேல் குழப்பமாயிடுது. சூர்யாவை அரஸ்ட் செய்பவர்கள் யார்? மொட்டை அடித்து ராணுவ உடையில் இருப்பவர் நாட்டு அதிபரா? அவரே துப்பாக்கி எல்லாம் எடுத்து சுடுறார் ! எல்லா டாக்குமெண்ட்ஸ் உடன் கடைசியில் சூர்யாவைஅனுப்பி வைக்கிறார்.. ஒரே குயப்பமா இருக்கு என மக்கள் புலம்பல் கேட்குது

கால் முளைத்த பூவே-க்கு பாலே டான்ஸ் என நிறைய எதிர்பார்ப்புடன் இருந்தால் நம்ம ஊரில் செட் போட்டு வெளிநாட்டு டான்சர் வைத்து ரொம்ப சுமாராய் எடுத்து விட்டனர்.

விசில் அடித்து கொண்டும் டான்ஸ் ஆடி கொண்டும் முதல் பாதி படம் பார்த்த இளைஞர்கள், படம் முடிந்து வரும்போது சற்று புலம்பி கொண்டு தான் வருகிறார்கள்

மாற்றான் : முதல் பாதி வென்றான். இரண்டாம் பாதி கொன்றான்.

நன்றி : PARATHAN
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget