மாற்றான் மாற்றானின் படமா - சூர்யாவின் சூடான தகவல்


மாற்றான் திரைப்படம் எந்த ஆங்கிலப் படத்தின் தழுவலும் அல்ல... ஒரிஜினல் கதை... சமூக நலன் சார்ந்தது, என்று நடிகர் சூர்யா கூறினார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் படம், `மாற்றான்.
' காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது படத்தின் ஹீரோ சூர்யா பேசுகையில், "இது எனக்கு முக்கியமான காலகட்டம். நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிகக் கவனமாக எடுக்க வேண்டிய கட்டம் இது. அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், `மாற்றான்.'
இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் `மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.

இது, ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் தழுவலோ அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை,'' என்றார்.
அவரிடம், 'படத்தில் இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?' என்று கேட்டனர் நிருபர்கள்.
அதற்கு சூர்யா, 'ஒரே சம்பளம்தான் வாங்கினேன்,' என்றார் சிரித்தபடி.
இயக்குநர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget