
ரேபிட்ஷேர் (Rapidshare)எனப்படும் கோப்புப்பகிர்வான்(file sharing) தளத்தில் உலகமெங்கும் உள்ள பயனர்கள் (users) எண்ணற்ற கோப்புகளை (files)ஏற்றி வைத்துள்ளனர். ஏற்றப்பட்ட (uploaded) கோப்புகளின் சுட்டிகளை (links) பிறருக்குச் சொல்லிவிடுவார்கள். அந்தச் சுட்டி தெரிந்தவர்கள் இணையிறக்கிக் (download)கொள்ளலாம். இந்தக் கோப்புகளின் சுட்டியை ஏதேனும் ஒரு உலவியின் (browser) முகவரிப் பகுதியில்
உள்ளிட்டால், இலவசப் பயனர்களுக்காக (free users) 30 முதல் 180 வினாடிகள் வரை காத்திருக்கச் சொல்லும். பின்பு அந்தக் குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் / இணையிறக்கம் செய்ய அனுமதி கொடுக்கும். ஆனால் இலவசப் பயனர்களுக்கான நிபந்தனைகள் (restrictions) நிறைய இருக்கின்றன.
சிறப்பம்சங்கள்:
1) அவற்றுல் மிக முக்கியமான ஒன்று குறிப்பிட்ட வினாடிகள் வரை காத்திருத்தல் வேண்டும்.
2) ஒரே நேரத்தில் ஒரு கோப்பு மட்டும்தான் தரவிறக்க இயலும்.
3) ஒவ்வொரு கணினியின் ஐபி. முகவரியை (IP Address) ரேபிட்ஷேர் நினைவில் வைத்துக்கொண்டுதான் தரவிறக்க அனுமதி கொடுக்கிறது.
4)ஒரே ஐபி முகவரி வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணையிறக்க அனுமதி அளிக்காது.
5)இதனால் நாம் மிகுந்த பொறுமையுடன் ஒன்றொன்றாக தரவிறக்கம் செய்ய வேண்டும்.
நம்மிடம் 10 சுட்டிகள் இருக்கின்றன. அனைத்தையும் இறக்கிவிட வேண்டும் எனில் ஒவ்வொன்றாகச் செய்தால் நிறைய நேரமிழப்பு நேரிடும்.ஆதலால் குறைந்த பட்சம் அடுத்தடுத்த கோப்புகளையாவது ஒரு Que வரிசையில் தொடர்ச்சியாக தரவிறக்கம் செய்ய அனுமதியளிக்கும் வகையில் உதவும் ஒரு இலவச மென்பொருளாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
![]() |
Size:514.7KB |