சூர்யாவை நினைச்சிக்கிட்டே, அவர் எப்படியெல்லாம் ரியாக்ஷன் காட்டுவார் என்பதை கற்பனை செய்தபடி பாடல் எழுதுவேன், என்றார் கவிஞர் தாமரை. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிற மாற்றான் படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய கவிஞர் தாமரை, சூர்யா குறித்துப் பேசும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்.
அவர் கூறுகையில், "அது என்னமோ சூர்யாவுக்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு
எழுதும்போது, அவரை நினைத்தபடிதான் வரிகளை எழுதுவேன். இந்த வரிகளைப் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத் திரையில் கற்பனை செய்துகொண்டே தான் எழுதுவேன்.
காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் என் பாடல்களுக்கு சூர்யா காட்டிய உணர்வுகள் அத்தனை அழகாக இருந்தன. இந்தப் படத்தில் 'யாரோ யாரோ' பாடலையும் சூர்யாவை நினைத்தபடிதான் எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது," என்றார்.
அப்ப மத்த நடிகர்களுக்கென்றால் எந்திரத்தனமாக எழுதிவிடுவாரோ!