ஐட்டம் பாடலுக்கு அசத்த வரும் ஓவியா!

களவாணி பட நாயகி ஓவியாவை கலகலப்பு படம் ஓரளவு பேச வைத்தது. அதையடுத்து சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து முடித்தார். ஆனால் அதையடுத்து எந்த படமும இதுவரை அவருக்கு புக்காகவில்லை. அடுத்து என்ன படத்தில் நடிக்கிறீர்கள்? என்று அவரை எப்போது கேட்டால், தமிழ், தெலுங்கில் சில கம்பெனிகளிடம் கதை கேட்டுவிட்டு மற்ற விசயங்களை பேசிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்னமும் எந்த படத்திலும் சைன் ஆகவில்லை என்கிறார்.
சரி, நீங்கள் படமே இல்லாததால், கேரளாவுக்கு சென்று செட்டிலாகி விட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், கேரளா என் சொந்த ஊர். மேலும் இப்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாததால் ஓய்வுக்காக வந்திருக்கிறேன். படம் கமிட்டானதும் மீண்டும் வந்து விடுவேன் என்று சொல்லும் ஓவியா, முன்னணி ஹீரோ படங்களில் குத்தாட்ட சான்ஸ் கிடைத்தாலும் தான் ஆட தயாராக இருப்பதாகவும் சொல்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்