பெரும்பாலும் அஜீத் படமென்றால் அப்படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் மத்தியில் போட்டிதான் நிலவும். ஆனால் அப்படிப்பட்ட அஜீத் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அணுகியபோது, எந்த மாதிரி கதை. அதில் எனக்கு எந்த மாதிரி வேடம் என்று எதைப்பற்றியும் கேட்காமல், சம்பள விசயத்திலேயே குறியாக இருந்தாராம். அதிலும் ஏற்கனவே ஒரு கோடியை எப்போதோ தாண்டி விட்ட அனுஷ்கா, அஜீத் படத்தில் நடிப்பதற்கு 2 கோடி ரவுண்டாக கேட்டாராம்.
ஆனால் அந்த அளவுக்கு படத்தில் உங்களுக்கு வேலையும் இல்லை. படத்தின் பட்ஜெட்டும் இல்லை என்று படாதிபதி சார்பில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அனுஷ்கா அசையவில்லையாம். தொடர்ந்து சம்பள பேரம் பேசியிருக்கிறார். இந்த சேதி அஜீத்தின் காதுக்கு சென்றபோது, ஓவராக பேசினால் அவரை படத்திலிருந்து தூக்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டு, தமன்னாவுக்கு போன் போட்டு பேசியிருக்கிறார். அவரோ, உங்களுடன் நடிக்க வேண்டுமென்றால் சம்பளமே இல்லையென்று சொன்னாலும் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்று ஸ்பாட்டிலேயே ஒப்புதல் கொடுத்திருக்கிறார். இந்த செய்தியை உடனே பட நிறுவனத்துக்கு சொல்லி தமன்னாவை புக் பண்ணியிருக்கிறார் அஜீத். ஆனால் இப்படி நேரடியாக அஜீத்தே தன்னை கடாசி விட்டு தமன்னாவை கமிட் பண்ணியிருக்கிற சேதி அறிந்து கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார் அனுஷ்கா. மேலும், இந்த சம்பவத்தினால் தனது மார்க்கெட் வீழ்ந்து விடாமலிருக்க சில அபிமான ஹீரோக்களின் அரவணைப்பையும் நாடியுள்ளார் அம்மணி.