
கணினியில் காணப்படும் கோப்புக்கள், கோப்புறைகளை எளிதான முறையில் உபயோக படுத்த கூடிய ஒரு மென்பொருளாக RoboBasket இருக்கின்றது. தானியங்கி முறையிலே கோப்புக்களை ஒழுங்குபடுத்தும் முறையில் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளானது கோப்பு, கோப்புறைகள் போன்றவற்றை நகல் எடுக்கவும், மற்றொரு இடத்திற்கு நகர்த்தவும் பயனுள்ளதாகக் காணப்படுவதுடன் அவற்றின் பெயர்களையும் மாற்ற உதவுகின்றது.
இவை தவிர தரவு வகை, கோப்புக்களின் அளவு, கோப்புக்களின் நீட்சி, கோப்புறைகள் காணப்படும் வந்தட்டின் பகுதி, கோப்பின் பெயர், போன்றவற்றின் அடிப்படையில் பல செயல்களை இம்மென்பொருளின் உதவியுடன் எளிதாக மேற்கொள்ள முடியும். இதனால் நமது பொன்னான நேரம் வீணாக்கப்படுவதில்லை.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
![]() |
Size:1.69MB |