உடும்பன் - திரை விமர்சனம்

நடிப்பு: திலீப் ரோஜர், சனா, கீத்திகா, சுனில், செந்தில் பிஆர்ஓ: செல்வரகு ஒளிப்பதிவு: கிச்சாஸ் இசை, எழுத்து, இயக்கம்: பாலன் தயாரிப்பு: ஜெகந்நாதன் - மாடர்ன் சினிமா தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடியிருக்கும் படம் உடும்பன். எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று, 'யாருப்பா இந்த இயக்குநர்?' என்று கேட்க வைத்திருக்கும் பாலனுக்கு முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!