தமிழகத்தை தாக்க வரும் சூறாவளியாய் பில்லா 2 நாளை வெளியீடு!

தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களிடையே இப்பொழுது பில்லா 2 ரிலீஸ் பற்றிய பேச்சுதான். 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கவுண்டவுன் புதன்கிழமை முதலே தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே ஒருவாரத்திற்கு முன்பிருந்தே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு கட் அவுட் வைப்பதும், கொடி, தோரணம் கட்டுவதும், களை கட்டும். இப்பொழுது அதே போன்ற காட்சிகள் அஜீத் நடிப்பில் வெளிவர