இன்றைய கூகுள் சிறப்பு என்ன?

ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரின் 46வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இன்றைய கூகுள் டூடுளில் அந்த தொடரின் கதாபாத்திரங்கள் வடிவில் டூடுள் போடப்பட்டுள்ளது. ஸ்டார் ட்ரெக் என்னும் தொலைக்காட்சி தொடரை தேசிய ஒளிபரப்பு நிறுவனம்(என்.பி.சி.) 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் 1969ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வரை ஒளிபரப்பியது. இந்த தொடர் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.