காமெடி விதவிதமா சரவெடி - அஞ்சலி

பர்பாமென்ஸ், கிளாமர் என்று தனது தனித்திறமையை காண்பித்து விட்ட அஞ்சலி, தற்போது ஆர்யா, சந்தானத்துடன் இணைந்து நடித்து வரும் சேட்டை படத்தில் சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போட்டுள்ளாராம். படம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்து ஆர்யா-சந்தானம் செய்யும் காமெடி ரிகர்சலில் தானும் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் அஞ்சலி.