கடுப்பில் சந்தானம் மிரட்டும் பவர்ஸ்டார் - காமெடி கலாட்டா


லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நாயகனாக நடித்த டாக்டர் சீனிவாசன் என்ற பவர்ஸ்டாரை கலாய்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் கணணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடிக்க வைத்தார் சந்தானம். தான் நினைத்தது போலவே அப்படத்தில் பவர்ஸ்டாரை இஷ்டத்துக்கு கலாய்த்தார். ஆனால் அதற்கு எந்த பதில் கமெண்டும் கொடுக்காமல் முகபாவணையால்
மட்டும் ரியாக்சன் கொடுத்தார் பவர்ஸ்டார். விளைவு, சந்தானம் பேசி நடித்த காமெடியை விட பவர்ஸ்டாரின் பாடிலாங்குவேஜ் காமெடிக்குத்தான் தியேட்டர்களில் பெரிய அளவில் கைதட்டல் கிடைத்தது. அதோடு தற்போது மளமளவென்று படங்களும் அவருக்கு புக்காகி வருகின்றன.

இதில், சந்தானம் ஏற்கனவே நடித்து வந்த சில படங்களிலும் பவர்ஸ்டார் கமிட்டாகி வருகிறார். அதோடு, சந்தானம் அவரை கலாய்ப்பது போலவே காமெடி ட்ராக் உருவாக்கி வருகிறார்களாம். ஆனால் இப்படி பவர்ஸ்டாருக்காக காமெடியை டைரக்டர்கள் திருத்தம் செய்வதால் உள்ளூர கடுப்பில் இருக்கிறார் சந்தானம். அதனால் தனது மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடித்து வரும் படங்களில் பவர்ஸ்டாரை இன்னும் மிரட்டலாக கலாய்த்து வருகிறாராம். ஆனால், அதற்கும் ஈடுகொடுத்து தனது ரியாக்சனை செமத்தியாக வெளிப்படுத்தி பதிலடி கொடுத்து வருகிறாராம் பவர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget