பவர் ஸ்டார் காமெடி பீஷா இல்ல கலக்கல் மாஷா!


பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு தான் ஒரு காமெடி பீஸ் என்று தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ரிலீனாதும் போதும் பவர்ஸ்டாரை கொண்டாடத் தான் செய்கிறார்கள். படத்தில் அவர் ஒரு டயலாக் பேசியிருப்பார், சிலரை பார்த்த உடனே பிடிக்கும், சிலரை பார்க்கப் பார்க்கப் பிடிக்கும், தன்னை பார்க்காமலேயே பிடிக்கும் என்பார்.
இதை அவரை நக்கலடிக்க வைத்த வசனமாகத் தெரிகிறது. ஆனால் அவரோ அதை மிகவும் பெருமையாகக் கூறியிருப்பார். கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் சந்தானம் ஒரு காட்சியில், நானாவது காமெடியன்னு தெரிந்து சுற்றுகிறேன், இந்த பவர் ஒரு காமெடி பீஸுன்னு தெரியாமலே சுத்துறான் என்று கூறியிருப்பார். 

அவர் படத்தில் வசனம் பேசியிருந்தாலும் அது தான் உண்மை. 

முன்னதாக பவர் ஸ்டார் ஒரு பேட்டியில், சூப்பர் ஸ்டாருக்கு போட்டின்னா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று கூறியிருந்தார். இதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். அதன் பிறகு இந்த ஆளு ஒரு காமெடி பீஸு போனா போகட்டும் என்று கூறி விட்டுவிட்டனர். தான் ஒரு காமெடி பீஸ் என்பது பவர்ஸ்டாருக்கு தெரியுமா, தெரியாதா? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்