
2013ம் ஆண்டு அஜீத் குமார் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. அஜீத் குமார் ஆண்டுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் 8 மாதத்திற்கு ஒரு படம் நடிப்பது என்று முடிவு செய்து அதன்படி நடித்தும் வருகிறார். இந்த ஆண்டு 'தல' ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் இந்த ஆண்டு அஜீத்தின் 2 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிக்கும் வலை படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இந்த படம் வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது
வலை படத்தில் அஜீத் கார், பைக் மற்றும் போட்டில் சாகசங்கள் செய்துள்ளார். இதில் காரின் முன்பு நின்று கொண்டு செல்லும் காட்சியை படமாக்கியபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.
வலை படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தமன்னா முதன்முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்கிறார்.